Login

Lost your password?
Don't have an account? Sign Up
திருப்பத்தூர்
மாவட்டம்
Yelagiri Hills.jpg
ஏலகிரி மலை
Tirupattur in Tamil Nadu (India).svg
திருப்பத்தூர் மாவட்டம்:அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் TamilNadu Logo.svg தமிழ்நாடு
தலைநகரம் திருப்பத்தூர்
பகுதி வட மாவட்டம்
ஆட்சியர்
திரு. அமர் குஷாவா,
இ. ஆ. ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

திரு. சிபி. சக்ரவர்த்தி
இ. கா. ப
நகராட்சிகள் 4
வருவாய் கோட்டங்கள் 2
வட்டங்கள் 4
பேரூராட்சிகள் 3
ஊராட்சி ஒன்றியங்கள் 6
ஊராட்சிகள் 208
வருவாய் கிராமங்கள் 195
சட்டமன்றத் தொகுதிகள் 4
மக்களவைத் தொகுதிகள் 2
பரப்பளவு 1831.99 ச.கி.மீ
மக்கள் தொகை
12,79,953 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இசீநே
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
635xxx
தொலைபேசிக் குறியீடு
04179
வாகனப் பதிவு
TN-83
இணையதளம் tirupathur

திருப்பத்தூர் மாவட்டம் (Tirupathur District) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருப்பத்தூர் ஆகும்.[1] இம்மாவட்டத்தை வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, 15 ஆகத்து 2019 அன்று திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.[2]

வரலாறு

19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாகவே இது இருந்தது. வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம், 1996 இல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது. பின்னர் வேலூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 15 ஆகஸ்டு 2019 அன்று, திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் நிறுவப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.[3]புதிய திருப்பத்தூர் மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி. கே. பழனிச்சாமி முறைப்படி துவக்கி வைத்தார்.[4]

மாவட்ட எல்லைகள்

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மேற்கே கிருஷ்ணகிரி மாவட்டம், தெற்கு மற்றும் கிழக்கே திருவண்ணாமலை மாவட்டம், கிழக்கே வேலூர் மாவட்டம் மற்றும் வடக்கே ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் 1831.99 ச.கிமீ பரப்பளவு கொண்டதாக இதன் எல்லைகளாக அமைந்துள்ளது

மக்கள் தொகை

புதியதாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள்தொகை 12,79,953 பேர் உள்ளனர்.

மாவட்ட நிர்வாகம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி என 2 வருவாய் கோட்டங்களும், 4 வருவாய் வட்டங்களும், 195 வருவாய் கிராமங்களும் கொண்டது.[5][6]

வருவாய் கோட்டங்கள்

  1. திருப்பத்தூர் கோட்டம்
  2. வாணியம்பாடி கோட்டம்

வருவாய் வட்டங்கள்

  1. ஆம்பூர் வட்டம்
  2. வாணியம்பாடி வட்டம்
  3. திருப்பத்தூர் வட்டம்
  4. நாட்ராம்பள்ளி வட்டம்

காவல்துறை அமைப்புகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்கான காவல்துறையில் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் ஒன்றும், இதன் கீழ் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஆகிய 3 இடங்களில் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களும், இதன் கீழ் சட்டம்- ஒழுங்கிற்கான 20 காவல் நிலையங்களும், 4 மகளிர் காவல் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன

உள்ளாட்சி அமைப்புகள்

நகராட்சிகள்

  1. திருப்பத்தூர்
  2. வாணியம்பாடி
  3. ஆம்பூர்
  4. ஜோலார்பேட்டை

பேரூராட்சிகள்

  1. உதயேந்திரம்
  2. ஆலங்காயம்
  3. நாற்றம்பள்ளி

ஊராட்சி ஒன்றியங்கள்

  1. திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம்
  2. ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம்
  3. ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
  4. நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம்
  5. கந்திலி ஊராட்சி ஒன்றியம்
  6. மாதனூர் ஊராட்சி ஒன்றியம்

அரசியல்

இம்மாவட்டத்தின் பகுதிகள் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதியில் உள்ளன. மேலும் இம்மாவட்டம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி என 4 சட்டமன்றத் தொகுதிகள் கொண்டுள்ளது.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி), ஜோலார்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை (சட்டமன்றத் தொகுதி), கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி), செங்கம் (சட்டமன்றத் தொகுதி), கீழ்பெண்ணாத்தூர் (சட்டமன்றத் தொகுதி) ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளையும் இணைத்து, இந்த திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதி

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி), வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) ஆகிய 2 தொகுதிகளையும், வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் (சட்டமன்றத் தொகுதி), அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி), கீழ்வைத்தியனான்குப்பம் (சட்டமன்றத் தொகுதி), குடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி) ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளையும் இணைத்து, வேலூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில்கள்

திருப்பத்தூர் தென்னிந்தியாவின் ஒரு தொழில்துறை மையமாகும். தோல் மற்றும் தோல் பொருட்கள் காலணிகள், ஆடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யப்படுகிறது பல பெரிய மற்றும் நடுத்தர தோல் தொழில்கள் உள்ளன. கனிம வளம் நிறைந்த மாவட்டம், செம்மண், செங்கல் களிமண் போன்ற கனிமங்களும் இந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

…ENGLISH:::

Tirupathur District
Yelagiri Hills
Yelagiri Hills
Tirupathur district
Location in Tamil Nadu
Coordinates: 12.4950° N, 78.5678° E
Country India
StateTamilNadu Logo.svg Tamil Nadu
RegionTondai Nadu
Established28 November 2019
Founded byEdappadi K. Palaniswami
HeadquartersTirupathur
TalukasTirupattur
Vaniyambadi
Ambur
Natrampalli
Government
 • TypeDistrict Administration
 • BodyTirupattur District Collectorate
 • District CollectorAmar kushwaha, IAS
 • Superintendent of PoliceBalakrishnan, IPS
Area
 • Total1,797.92 km2 (694.18 sq mi)
Population
 (2011)[1]
 • Total1,111,812
 • Density620/km2 (1,600/sq mi)
Languages
 • OfficialTamil
Time zoneUTC+5:30 (IST)
Vehicle registrationTN-83
Websitetirupathur.nic.in

Tirupattur district, or Tirupathur district,[2][3] is one of the 38 districts in the southern Indian state of Tamil Nadu. The district was formed in 2019 by the division of Vellore district into three smaller districts.[4] Its creation alongside Ranipet district was announced on 15 August 2019, and it was officially declared on 28 November 2019.[2] The town of Tirupattur serves as the district headquarters.[5][6][7][8][9]

Geography

The district is bordered by Vellore district to the northeast, Krishnagiri district to the southwest, Tiruvannamalai district to the southeast, and the Chittoor district of Andhra Pradesh to the northwest. National Highway 48 passes through the district.

Divisions

Tirupattur district was created by the splitting off of the three southwestern taluks of Vellore district: Tirupattur, Vaniyambadi, and Ambur.[10] The district now includes Natrampalli for a total of four taluks.[2]

Politics

Tiruppattur, Vellore Assembly constituency is the assembly constituency. Since 2016 Tiruppattur, Vellore Assembly constituency is represented in the Tamil Nadu Legislative Assembly by A Nallathambi of DMK party.[11] He was reelected in 2021.[12][13]

References

  1. ^ a b "District List | Tamil Nadu Government Portal". www.tn.gov.in. Retrieved 9 September 2020.
  2. ^ a b c "About District". Tirupathur District. District Administration. 21 January 2021. Retrieved 25 January 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. ^ "Thirupathur District | Sandalwood City | India". Retrieved 29 April 2021.
  4. ^ Staff Reporter (28 November 2019). "Chief Minister inaugurates Tirupattur as 35th district of Tamil Nadu". The Hindu. ISSN 0971-751X. Retrieved 24 December 2019.
  5. ^ J., Shanmughasundaram (15 August 2019). "Vellore district to be trifurcated; Nov 1 to be Tamil Nadu Day". The Times of India. Retrieved 15 August 2019.
  6. ^ "TN's Vellore district to be split into 3, Tirupathur and Ranipet to become new districts". The News Minute. 15 August 2019. Retrieved 15 August 2019.
  7. ^ "Tamil Nadu CM Palaniswami announces trifurcation of Vellore district". India Today. Press Trust of India. 15 August 2019. Retrieved 15 August 2019.
  8. ^ "Tamil Nadu Chief Minister Announces Trifurcation Of Vellore District". NDTV.com. Press Trust of India. 15 August 2019. Retrieved 12 July 2020.
  9. ^ Jesudasan, Dennis S. (15 August 2019). "Vellore district to be trifurcated, says Edappadi Palaniswami". The Hindu. ISSN 0971-751X. Retrieved 15 August 2019.
  10. ^ https://censusindia.gov.in/2011census/dchb/3304_PART_B_DCHB_VELLORE.pdf[bare URL PDF]
  11. ^ "LIST OF SUCCESSFUL CANDIDATES, Election Commission of India- State Election, 2016 to the Legislative Assembly Of Tamil Nadu" (PDF). Tamil Nadu. Election Commission of India. Retrieved 31 January 2017.
  12. ^ "Tamil Nadu General Legislative Election 2021". Election Commission of India. Retrieved 21 September 2021.
  13. ^ "Tamil Nadu Election Results 2021 live | Tamil Nadu Assembly Election Results & Updates". NDTV.com. Retrieved 21 September 2021.


This is an example page. It’s different from a blog post because it will stay in one place and will show up in your site navigation (in most themes). Most people start with an About page that introduces them to potential site visitors. It might say something like this:

Hi there! I’m a bike messenger by day, aspiring actor by night, and this is my website. I live in Los Angeles, have a great dog named Jack, and I like piña coladas. (And gettin’ caught in the rain.)

…or something like this:

The XYZ Doohickey Company was founded in 1971, and has been providing quality doohickeys to the public ever since. Located in Gotham City, XYZ employs over 2,000 people and does all kinds of awesome things for the Gotham community.

As a new WordPress user, you should go to your dashboard to delete this page and create new pages for your content. Have fun!